செய்திகள் :

கூண்டில் சிக்கிய பெண் புலி, மீண்டும் வனத்திற்குள் விடுவிப்பதில் சிக்கல் - என்ன நடந்தது?

post image
கேரள மாநிலம் வயநாடு, புல் பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாள்களாக நடமாடி வந்த புலி ஒன்று கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்தது.

மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அச்சத்தில் அந்த புலியைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். கால்நடைகளைத் தாக்கி வரும் அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கூண்டில் சிக்கிய புலி

புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் 5 கூண்டுகளை வைத்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் துப்புரா பகுதியில் நடமாடி வந்த அந்த புலி, நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது. சுமார் 8 வயது மதிக்கத்தக்க அந்த பெண் புலியின் உடலில் பல இடங்களிலும் காயங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மீண்டும் வனத்திற்குள் விடுவித்தால் அதனால் வனவிலங்குகளை வேட்டையாட முடியாது என்பதால் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்திருக்கிறது கேரள வனத்துறை.

இது குறித்து கேரள வனத்துறையினர், " கூண்டில் சிக்கிய புலியை முதற்கட்டமாக குப்பாடி வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. முதலில் அதன் உடல்நிலை ஆய்வு செய்யப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கூண்டில் சிக்கிய புலி

காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த காரணத்தாலேயே கால்நடைகளை வேட்டையாடியிருக்கிறது. மீண்டும் காட்டிற்குள் விடுவிப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் உயிரியல் பூங்காவில் வைத்தே தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது " என்றனர்.

`சுத்தமான காற்றுடைய நகரங்கள்'- முதலிடம் பிடித்த தமிழக மாவட்டம் எது தெரியுமா?

இந்தியாவில் தூய்மையான காற்றை கொண்ட நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கிறது.நாடு முழுவதும் உள்ள நகரங்களின் சமீபத்திய காற்றுத் தரக் குறியீடு (AQI) ஜனவரி 9ஆம் தேதி வெள... மேலும் பார்க்க

Dian Fossey: ஒரு ’மலை கொரில்லா’வின் சமாதியின் அருகே புதைக்கப்பட்டப் பெண்மணி - யார் இவர்?

டயேன் ஃபாசி.53 வயதில் கொலை செய்யப்பட்ட இவருடைய உடலை மலை உச்சியில் இருந்த ஒரு கொரில்லாவின் சமாதியின் அருகே புதைத்தார்கள். யார் இந்த டயேன் ஃபாசி? அவரை ஏன் கொலை செய்தார்கள்? அவருடைய உடலை ஏன் கொரில்லாவின்... மேலும் பார்க்க

Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?

சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

US Los Angeles fires: பற்றி எரியும் அமெரிக்க வர்த்தக பூமி - உண்மை நிலவரம்... முழு அலசல் | Long Read

கலிபோர்னியா காட்டுத் தீஅமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இவற்றில் கலிபோர்னியா மாகாணம் தனித்துவமானது. இந்த மாகாணத்தின் ஒரு ஆண்டின் Gross State Product (GSP) $4.1 டிரில்லியன் டாலர் ஆகும்.‌ மொத்... மேலும் பார்க்க

ஊட்டி: வனவிலங்கு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்; காத்திருந்த வனத்துறை கூண்டில் சிக்கிய கரடி!

வனவிலங்குகளுக்கான வாழிடச் சூழல் அருகி வரும் நீலகிரியில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஊட்டி அருகில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்கிற இ... மேலும் பார்க்க