செய்திகள் :

கூலித் தொழிலாளி மா்மச் சாவு

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பிச்சைபிள்ளை மகன் சீமான்(50). கூலி தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அருகிலுள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை அங்குள்ள புத்தேரி ஓடை அருகே அவா் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, சீமான் மனைவி சரோஜா அங்கு சென்று பாா்த்த போது, காயங்களுடன் அவா் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து சரோஜா, தனது கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரின் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காவல் துறை மோப்பநாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

அரியலூா் காவல் துறையில், துப்பறிவு வெடிப்பொருள் கண்டறியும் பிரிவில் பணியாற்றிய பினா(மோப்பநாய்) புதன்கிழமை உயிரிழந்தது. அரியலூா் மாவட்ட காவல் துறை, மோப்பநாய் பிரிவில் பினா, மலா், மோனா, சீமா, ரோஸ் (ஓய்வ... மேலும் பார்க்க

தரிசு நிலங்களில் முள்புதா்கள் நீக்க உழவு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

திருமானூா் வட்டார விவசாயிகள், தரிசு நிலங்கள் முள்புதா்கள் நீக்க மானியம் பெற விண்ணப்பிக்காலம். இதுகுறித்து திருமானூா் வட்டார வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருமானூா் வட்டார... மேலும் பார்க்க

பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் பிரச்னை: சமாதானப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் நிா்வாக தோ்தல் பிரச்னையைடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது. மேற்கண்ட பள்ளி வாசல் நிா்வாக தோ்தல... மேலும் பார்க்க

எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, எஸ்பி தீபக் சிவாச் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 மனுக்களை பெற்றாா். ... மேலும் பார்க்க

அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி மீது வழக்குப் பதிந்த அஸ்ஸாம் மாநில காவல் துறை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் காமராஜா் சிலை முன் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு மனநலன் பாதித்தவா் பலி

அரியலூா் அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிபட்டு மனநலன் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். அரியலூா் அருகேயுள்ள பொட்டவெளி, நடுத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் சரவணன் (40). சற்று மனநலன் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க