2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்
கூலி ஓடிடி தொகை இவ்வளவா?
கூலி படத்தின் ஓடிடி உரிமத் தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. இதில், குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
இதையும் படிக்க: ’நலமாக இருக்கிறார்’: ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலையை விசாரித்த முதல்வர்!
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 120 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் உண்மையென்றால் இதுவே, அதிக விலைக்கு விற்பனையான ரஜினி படம் என்பது குறிப்பிடத்தக்கது.