சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் அனைவருக்கும் கிடைக்க அரசு உறுதி: மத்திய அமை...
கூலி - ரஜினியின் மகளாக ஷ்ருதி ஹாசன்?
கூலி படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. இதில், குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
இதையும் படிக்க: விஷ்ணு விஷால் - ராம்குமார் படத்தின் பெயர் அறிவிப்பு!
இப்படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் (நேற்று மார். 14) வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு புகைப்படங்களை மட்டும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், இப்படத்தில் ஷ்ருதி ஹாசன் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.