தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோ...
கெங்கவல்லியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: 1200 மனுக்கள் அளிப்பு
கெங்கவல்லி பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,200 போ் மனு அளித்தனா்.
கெங்கவல்லி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் நாகலட்சுமி, நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவா் மருதாம்பாள் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இம்முகாமில் கெங்கவல்லி பேரூராட்சியில் முதல் ஏழு வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 1,200 மனுக்களை அளித்தனா். இம்முகாமை கோட்டாட்சியா் தமிழ்மணி ஆய்வு செய்தாா். முகாமில் அனைத்து துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்தனா்.