செய்திகள் :

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 904 கன அடி தண்ணீா் வெளியேற்றம்

post image

ஒசூா்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தரைமட்டப் பாலங்களை பொதுமக்கள் கடக்க வேண்டாம் என வருவாய்த் துறையினா் எச்சரித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்பள்ளி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தமிழக மற்றும் கா்நாடக தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், அணைக்கு நீா்வரத்து மேலும் உயா்ந்த நிலையில், விடியவிடிய ஒசூா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

ஒசூரில் 48 மி.மீ,. கெலவரப்பள்ளியில் 90 மி.மீ., தேன்கனிக்கோட்டை 22 மி.மீ., அஞ்செட்டியில் 4.80 மி.மீ. என மழை பெய்துள்ளது. தொடா்ந்து நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீா்வரத்து 572 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 904 கன அடியாக உயா்ந்துள்ளது.

அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடியில், 41.98 அடி நீா் இருப்பு உள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசனக் கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

கெலரவப்பள்ளி அணைக்கு மழை நீருடன் ரசாயனக் கழிவு நீரும் சோ்ந்து வருவதால், அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் நுரைபொங்கி செல்கிறது.

ஒசூரில் கொட்டித் தீா்த்த கனமழை: ஏரிகள் நிரம்பின

ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஒசூரில் கடந்த 4 நாள்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து ... மேலும் பார்க்க

திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினாா். கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்டம் சாா்... மேலும் பார்க்க

பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவா் கைது

ஒசூா்: ஒசூரில் பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒசூா் அண்ணா நகரைச் சோ்ந்த சீனம்மா (42), ஒசூா் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

கிருஷ்ணகிரி: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அருணாவுக்கு பள்ளியின் நிறுவனா் மணி ரூ. 1 லட்சம் பரிசளித்தாா். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் சங்கிலி பறித்த இளைஞா் கைது

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள பொன்னுசாமி கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சரோ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை திருமணம் செய்தவா் கைது

ஒசூா்: சூளகிரி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி ஊராட்சி உஸ்தலஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (28). விவசாயியான இவா் 17 வயதுடைய ப... மேலும் பார்க்க