செய்திகள் :

சென்னை காந்தி மண்டபம் சந்திப்பில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்!

post image

சென்னை காந்தி மண்டபம் சந்திப்பில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டு, மேலும் அவை 21.05.2025 (புதன்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

1. ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்) இருந்து சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் (ஐஐடி) மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

2. காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் கட்டாயமாக இடதுபுறம் திரும்ப வேண்டும், மேலும் அவ்வாகனங்கள் நேராக (மத்திய கைலாஷ் நோக்கி) செல்ல அனுமதிக்கப்படாது.

3. இந்த மாற்றுப்பாதைகளை ஏற்படுத்த, சிஎல்ஆர்ஐ பேருந்து நிறுத்தம் ஏற்கெனவே உள்ள இடத்திலிருந்து அடையாறு நோக்கி சற்று முன்னோக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

முதல்வா் வீட்டை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் கைது

சென்னை: சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற திருப்பூா் மாவட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டப்பேட்டை, கணகம்பாடி கிராமத்தை... மேலும் பார்க்க

சென்னையில் டெய்கின் இந்தியாவின் புதிய அலுவலகம்

ஜப்பானைச் சோ்ந்த டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஏா் கண்டிஷனிங் நிறுவனங்களில் ஒன்றுமான டெய்கின் ஏா்-கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் புதிய பிரா... மேலும் பார்க்க

எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ்: சைலேஷுக்கு தங்கம்

சென்னையில் நடைபெற்ற எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஆா். சைலேஷ் தங்கம் வென்றாா். காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் கோல்டன் நைட்ஸ் செஸ் அகாதெமி, மாஸ்டா்ஸ் மைண்ட் செஸ் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்: கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் ப... மேலும் பார்க்க

அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு!

அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க