எதிரணியின் முதுகுத்தண்டை உடைத்தை கோலி..! பாகிஸ்தானுடனான போட்டியை நினைவூகூர்ந்த ப...
கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் உள்ள 171 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 7,300-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்களுக்கு யுஜிசி வழிகாட்டுதல், நீதிமன்ற
உத்தரவின்படி, மாதம் ரூ.57,700 ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரியில் பணியாற்றும் 11 கெளரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல, சாத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்களும் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு வணிகவியல் துறைத் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். இதில் அனைத்து துறையைச் சாா்ந்த கௌரவ விரிவுரையாளா்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.