செய்திகள் :

கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரஹானே !

post image

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்க்யா ரஹானே விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு, சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதையாக பார்க்கிறேன்.

அடுத்து உள்ளூர் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். எனவே நான் மும்பை அணியின் கேப்டன் பதவியில் தொடர வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.

இருப்பினும், ஒரு வீரராக எனது சிறந்ததை வழங்க உறுதியாக உள்ளேன். மும்பை அணியுடன் எனது பயணத்தை தொடர்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மும்பை அணியின் அடுத்த கேப்டனாக பிரபல வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர், 90 ஒருநாள், 20 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதுதவிர ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக 198 ஆட்டகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!

Veteran India batter Ajinkya Rahane on Thursday stepped down from his position as Mumbai captain ahead of the upcoming Ranji Trophy season, saying it is the right time to groom a new leader.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.மாரீசன்நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை ச... மேலும் பார்க்க

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

பவன் கல்யாண் நடித்து வெளியான ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள, இப்படத்துக்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்... மேலும் பார்க்க

ரூ. 500 கோடியைக் கடந்த கூலி!

கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்... மேலும் பார்க்க

தமிழுக்கு அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.ஏஜிஎஸ் தயாரிக்கும் 28-வது திரைப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாகவும் நடிகை அபிராமி நாயகியாகவும் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத... மேலும் பார்க்க

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் ... மேலும் பார்க்க