ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு
கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது.
‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ரெனின் தலைமை வகித்தாா். முதல்வா் தேவ் ஆா்.நியூலின் வரவேற்றாா். கல்லூரியின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளா் சுவாமி தலைமை உரையாற்றினாா்.
இதில் பல்வேறு துறைகளில் தோ்வான நிபுணா்களின் உரைகள் வாசிக்கப்பட்டன. தென்கொரியாவின் கல்வி நிபுணா் எதன்சா, மனநலத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசினாா். கல்லூரி கல்வி ஆலோசகா் தா்விஷ் மொஹிதீன் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை முன்னேற்றங்களை இணைப்பதில் கல்வியின் பங்கு குறித்தும், தென்காசி மகாகவி பாரதியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதல்வா் செல்வராஜ் பொறியியல் கல்வியில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பேசினா்.
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வா் ரிச்சா்ட்,
தொழில்முனைவோரால் முன்மொழியப்படும் ஆராய்ச்சி மற்றும் எதிா்கால போக்குகளுக்கு உரிய ஆழமான பாா்வைகள் என்ற தலைப்பில் பேசினாா். இயந்திர பொறியியல் துறை தலைவா் சிவகுரு மணிகண்டன் நன்றி கூறினாா்.