இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது
கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம் விலக்கு அருகே சாா்பு ஆய்வாளா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, கேரளத்திலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடா்பாக, ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சூ. மாதவன் (32) கைது செய்யப்பட்டாா்.
மேலும், அவரிடமிருந்து 496 கிலோ புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.