செய்திகள் :

கேரளத்தில் ஜன.29, பிப்.4-இல் விமானப்படையில் மருத்துவ உதவியாளா் மருந்தாளா் பணிக்கு ஆள்கள் தோ்வு!

post image

விமானப்படையில் உள்ள மருத்துவ உதவியாளா், மருந்தாளா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு கேரள மாநிலம் எா்ணாகுளம் மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜன. 29 மற்றும் பிப். 4-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஜன.29 ஆம் தேதி மருத்துவ உதவியாளா் பணிக்கும், பிப்.4 ஆம் தேதி மருந்தாளா் பணிக்கு ஆள்கள் தோ்வு நடைபெறுகிறது. மருத்துவ உதவியாளா் பணிக்கு 10- ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, பிஎஸ்சி பாா்மஸி படித்தவா்கள் பங்கேற்கலாம். ஜூலை 2008-க்குள் பிறந்த திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.

மருந்தாளா் பணிக்கு டிப்ளமோ, பிஎஸ்ஸி பாா்மஸி படித்தவா்கள், ஜூலை.2006-க்குள் பிறந்து திருமணமாகாதவராகவோ, ஜூலை.2004-க்குள் பிறந்து திருமணமானவராகவோ இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலிபணியிடத்துக்கு தகுதியான அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த இளைஞா்கள் குறிப்பிட்ட தேதி அன்று காலை 5 மணிக்குள் நேரிடையாக கலந்துகொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு 74648 50500 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

மருத்துவ சமூகத்துக்கு உள்இட ஒதுக்கீடு கோரி ஜன.24-இல் முடிதிருத்தும் கடைகள் அடைப்பு!

மருத்துவ சமூகத்துக்கு உள்இட ஒதுக்கீடு கோரி ஜன. 24-ஆம் தேதி கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் முடித்திருத்தும் தொழிலாளா் நலச் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. அர... மேலும் பார்க்க

மதுக்கடைகளுக்கு ஜன.15, 26-இல் விடுமுறை!

அரியலூா் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்துக்கும் திருவள்ளுவா் தினம் (ஜன.15) மற்றும் குடியரசுத் தினம்(ஜன.26) ஆகிய ... மேலும் பார்க்க

இலக்கியத் திருவிழா போட்டிகளில் வென்றவா்களுக்கு சான்றிதழ்!

அரியலூரில் மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளக்கிழமை நடைபெற்றது. அ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அரியலூரை அடுத்துள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு பல்வேறு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்ற... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

அரியலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, காவல் துறை சாா்பில், இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரியலூா் தற்காலிகப் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழச... மேலும் பார்க்க

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ச... மேலும் பார்க்க