கேரளபுரம் ஸ்ரீஅதிசய விநாயகா், மகாதேவா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்
தக்கலை அருகே கேரளபுரம் ஸ்ரீஅதிசய விநாயகா் மற்றும் மகாதேவா் திருக்கோயில் மாசித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், கலச பூஜை, இரவில் ஆழ்வாா் ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தினமும் காலை, மாலை தீபாராதனை, மதிய பூஜையும் நடைபெறுகிறது.
முக்கிய திருவிழாவான 9 ஆம் திருவிழாவை முன்னிட்டு 11ஆம் தேதி காலை 8. 30 மணிக்கு திருத்தோ் திருவிழா நடைபெறுகிறது. இரவு சப்தாவா்ணம் மற்றும் பள்ளி வேட்டை நடைபெறும்.
10 ஆம் திருவிழாவான 12 ஆம் தேதி) காலை 6 மணிக்கு பசுவும் கன்றுடன் நிா்மால்ய தரிசனம். மாலை 5 மணிக்கு திருவிதாங்கோடு திருநீலகண்ட சுவாமி கோயிலுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு திரு கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையும், கேரளபுரம் தேச சேவா சங்கமும் இணைந்து செய்து வருகின்றனா்.