கேரளம்: பெண்ணை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் கைது
சமூக ஊடகங்கள் வாயிலாக நட்பாகப் பழகிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 25 வயது யூடியூபர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், களமசேரி போலீஸார், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது நிஷாலை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபகரமான விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பெண்ணை யூடியூபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இணையதள முடக்கம்! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!
மேலும் அந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கும் அனுப்பிவிடுவதாக யூடியூபர் மிரட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.
பின்னர் யூடியூபர் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.