செய்திகள் :

கேரள அரசுடன் இணைந்து பணியாற்ற Vloggers, Youtubers, Instagram இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு

post image

கேரளாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் கேரளாவின் வளர்ச்சியைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 'Vloggers, Youtubers, Instagram, Facebook' உள்ளிட்ட சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது கேரள அரசு.

இதில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3,00,000 ஃப்லோவர்ஸ், ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த சேனல்கள், எந்தவொரு காவல்துறை புகார்களும், சர்சைகளும் இல்லாத நபராக இருக்க வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை.

Vloggers

கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாடுகளின்படி தகுதி வாய்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த விண்ணப்பத்திலேயே உங்களின் தரமான வீடியோக்கள், சமூக வலைதள பக்கங்களின் லிங்கையும் விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டியிருக்கும்.

தரமான ஐடியாக்கள், கைதேர்ந்து சிறப்பாக வீடியோ எடுப்பவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வீடியோக்கள் எடுக்கலாம். கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணையதளம் மூலம் இந்த மாதம் ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் இந்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நல்ல வீடியோக்களுக்குப் பரிசும், அரசுடன் இணைந்து பணியாற்றவும் வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்' - என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கு... மேலும் பார்க்க

``இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்'' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

'இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார். தனியார் கல்லூரியில... மேலும் பார்க்க

கும்பகோணம்: குப்பைக் கூளமாய் காட்சியளிக்கும் நதிநீர் கால்வாய்; அலட்சியம் காட்டாமல் சீரமைப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த புளியஞ்சேரி என்ற கிராமத்தை ஒட்டிய நதிநீர்கால்வாய்தான் நாம் இங்கு பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த கால்வாயானது 1924-ம் வருடம் விவசாய பாசனத்திற... மேலும் பார்க்க

பர்கூர்: சிதிலமடைந்து இடியும் நிலையில் வீடுகள்; அச்சத்துடன் வாழும் பழங்குடிகள் - கண்டுகொள்ளுமா அரசு?

பர்கூர் அருகே சிதலமடைந்த வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களது குடியிருப்புகளை புனரமைக்காமல் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர... மேலும் பார்க்க

கனரக வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, நாளை முதல் காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை சென்னை தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து... மேலும் பார்க்க

India - Russia: "இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் ரஷ்ய அதிபர் புதின்"- பிரதமர் மோடி சொன்ன தகவல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதல் வரிவிதித்துள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ர... மேலும் பார்க்க