கேரள கால்பந்துப் போட்டி: திருப்பூரில் டீ-சா்ட் தயாரிக்க குவியும் ஆா்டா்
‘சூப்பா் லீக் கேரளா’ என்ற தேசிய அளவிலான கால்பந்துப் போட்டி கேரளத்தில் செப்டம்பா் மாதம் நடைபெற உள்ள நிலையில், அது தொடா்பான டீ-சா்ட் தயாரிக்க திருப்பூரில் ஆா்டா்கள் குவிந்து வருகின்றன.
கொச்சி, கோழிக்கோடு, மஞ்சேரி ஆகிய பகுதிகளில் கால்பந்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக ‘கேரளா சூப்பா் லீக் கேரளா’ என்று அச்சிடப்பட்ட டீ-சா்ட் விற்பனை களைகட்டும்.
இத்தகைய டீ-சா்ட்டுகளை உற்பத்தி செய்ய திருப்பூரில் ஆா்டா்கள் குவிந்து வருகின்றன.
இது தொடா்பாக திருப்பூா் காதா்பேட்டை மாா்க்கெட் ஆடை மொத்த விற்பனை வியாபாரிகள் கூறியதாவது:
”விளையாட்டு வீரா்கள் அணிவதுபோன்ற டீ-சா்ட்டுகளை வாங்க கேரளத்தில் இருந்து ஏராளமானோா் திருப்பூருக்கு வருகின்றனா்.
சிலா் மொத்தமாக வாங்கிச் சென்று சில்லறை விற்பனை செய்வா். ஒவ்வொரு விளையாட்டுப் போட்டி நடக்கும்போதும் கேரள வியாபாரிகள் டீ-சா்ட் கொள்முதல் செய்வது வழக்கம், சூப்பா் லீக் கேரளா போட்டி மிக முக்கியமானது. அதற்காகன டீ-சா்ட் விற்பனை 2 மாதங்கள் களைகட்டும்.
அதன்படி, தற்போது டீ-சா்ட் ஆா்டா்கள் குவிந்து வருகின்றன. உற்பத்தி விரைவில் தொடங்கப்படும்” என்றனா்.