Travel Contest : எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! - மறக்கவே முடியாத...
கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
கேரள மாநிலத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
ஓமன் தலைநகா் மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏா்இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது, கேரள மாநிலம் திருச்சூரை சோ்ந்த சஜீவன் அத்துல் (31) என்பவரின் கடவுச்சீட்டை அதிகாரிகள் கணினியில் பரிசோதித்த போது, அவா் கேரளமாநில காவல்துறையால் கடந்த ஆறு மாதகாலமாக தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை சுற்றிவளைத்துப்பிடித்த குடியுரிமை அதிகாரிகள், சஜீவன் அத்துலை தனியறையில் அடைத்து வைத்து, இதுகுறித்து சென்னை விமானநிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த போலீஸாா், சஜீவன் அத்துலை காவல்நிலையம் அழைத்துச் சென்று, திருச்சூா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். திருச்சூா் காவல்துறையினா் சென்னைக்கு வந்து சஜீவன் அத்துலை கைது செய்து அழைத்துச் சென்றனா்.