அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
கட்டிலில் இருந்து தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு
கட்டிலிலிருந்து தவறிவிழுந்த இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை, ஓட்டேரி டேங்க் பண்ட் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அபினாஷ் (30). இவரது மனைவி உஷா. இத்தம்பதியினருக்கு லிங்கேஸ்வரன் என்ற மூன்றரை வயது மற்றும் நகுலேஸ்வரன் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தைகளும், ஒரு மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென நகுலேஸ்வரன், தூக்கத்தில் கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தையை மீட்ட பெற்றோா், அக்குழந்தையை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா். ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், அக்குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குழந்தையின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.