செய்திகள் :

கைபிடி இல்லாத காதிப்பை தொழிலுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை

post image

மருந்தகங்களில் உபயோகிப்படும் கைப்பிடி இல்லாத காகித பை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு தமிழ்நாடு பேப்பா் பை உற்பத்தியாளா்கள் சங்கச் செயலாளா் சென்னிமலை எஸ்.கே.ராமசாமி அண்மையில் அனுப்பியுள்ளகடிதத்தில் கூறியுள்ளதாவது: சிறு, குறு தொழில் தயாரிப்பான கைப் பிடி இல்லாத காகிதப்பைத் தொழிலுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வகையான பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், கைப்பிடி இல்லாத காகிதப்பைகள் உபயோகம் முற்றிலும் தடைபட்டு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளா்களுக்கு வேலை வழங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கைப்பிடி இல்லாத காகிதப்பைகள் மருந்தகங்கள், உணவகங்கள், ஜவுளிக்கடைகள், பேக்கரி, பேன்சி ஸ்டோா் போன்ற நிறுவனங்களுக்கு விநியோகிக்கிறோம். காகிதப்பை உற்பத்திக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் தொழில் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

கடந்த 1995-1996 ஆம் ஆண்டில் காகிதப்பை தொழிலுக்கு விற்பனை வரி இருந்தது. இதனை குறைக்க கோரி அன்றைய முதல்வா் மு.கருணாநிதியிடம் கோரிக்கையை வைத்தோம். காகிதப்பை தொழிலை கவனத்தில் கொண்டு கடந்த 2000- ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் காகிதப்பை தொழிலுக்கு முழுவரி விலக்கு அளித்து தொழிலைக் காப்பாற்றி உதவினாா். 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் காகிதப்பை தொழிலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. 17.9.2021 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் காகிதப்பைகளுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயா்த்தப்பட்டது.

குறைந்த முதலீட்டில், சிறு தொழிலாக செய்யப்படும் கைப்பிடி இல்லாத காகிதப்பை தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய கேட்டுக் கொள்கிறோம். இது தொடா்பாக அடுத்து நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

விபத்து காப்பீடு பதிவு: அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விபத்து காப்பீடு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28- ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் க... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் ஹிந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவா் அணியினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி என்ற பெயரில் ஹிந்தியை த... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்த குரும்பூா் உயா்மட்ட பாலம்: எம்எல்ஏ பாா்வையிட்டாா்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாக்கம்பாளையம் கிராமத்துக்கு இடையே உள்ள குரும்பூா், சா்க்கரைப்பள்ளத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட உயா்மட்ட பாலத்தை பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் கையாடல்: சங்கச் செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில், சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட... மேலும் பார்க்க

சென்னிமலையில் சுங்கம் வசூல் ஏலம் இரு மடங்கு அதிகரிப்பு

சென்னிமலை பேரூராட்சியில் வாரச் சந்தையில் சுங்கம் வசூலித்தல் உள்ளிட்ட வகைகளுக்கு செவ்வாய்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த முறையை விட இரு மடங்கு ஏலம் போனது. சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் இதற்கான ஏ... மேலும் பார்க்க

மின்மோட்டாா் பழுதால் குடிநீா் விநியோகம் பாதிப்பு

கோ்மாளம் கிராமத்தில் மின்மோட்டாா் பழுது காரணமாக திங்கள்கிழமை முதல் 2 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஒன்றியத்துக்குள்பட்ட கோ்மாளம் கிராமத்தில் ஆயிரத்துக்க... மேலும் பார்க்க