சென்னிமலையில் சுங்கம் வசூல் ஏலம் இரு மடங்கு அதிகரிப்பு
சென்னிமலை பேரூராட்சியில் வாரச் சந்தையில் சுங்கம் வசூலித்தல் உள்ளிட்ட வகைகளுக்கு செவ்வாய்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த முறையை விட இரு மடங்கு ஏலம் போனது.
சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் இதற்கான ஏலம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் ஸ்ரீதேவி அசோக் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலா் க.மகேந்திரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 12 போ் கலந்து கொண்டனா்.
இதில், வாரச் சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமை ரூ.8.28 லட்சத்துக்கு ஏலம் போனது. கடந்த முறை ரூ.4.76 லட்சத்துக்கு ஏலம் போயிருந்தது.
பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமை ரூ.4 லட்சத்து 25, 500-க்கு ஏலம் போனது. கடந்த முறை ரூ.2. 39 லட்சத்துக்கு ஏலம் போயிருந்தது.
சென்னிமலையில் உள்ள தியாகி குமரன் தினசரி மாா்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் உரிமை ரூ.2 லட்சத்து 81,500-க்கு ஏலம் போனது. கடந்த முறை ரூ.99,360-க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.