அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான்: பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!
வேலூர்: ரயிலில், மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு என்னிடம் அத்துமீறிய ஹேமராஜ், என் கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான் என்று ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் கூறியிருக்கிறார்.
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், குற்றப் பிண்ணனி கொண்ட ஹேமராஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண் செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், ஓடும் ரயிலில்
மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டான். நானும் அவனிடம் அரை மணி நேரமாக போராடினேன். கர்ப்பிணியாக இருப்பதால் விட்டுவிடுமாறு கொஞ்சினேன்.
பிறகு கத்திக் கூச்சலிட்டதால், என் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று, கையை உடைத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். ரயிலில் இருந்து விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரே கையில் ரயிலைப் பிடித்துக் கொண்டு போராடினேன். ஆனால், என் கையை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டான். பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மகளிர் பெட்டியில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பது பலரையும் கலங்க வைப்பதாக உள்ளது.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி யார்?
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (பிப்-6) தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது கர்ப்பிணி பெண், ரயிலில் கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த இளைஞர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது, அவர் கத்திக் கூச்சலிட்டதால், கர்ப்பிணியின் கையை உடைத்து ஓடும் ரயிலிலிருந்து கே.வி. குப்பம் அருகே கீழே தள்ளியிருக்கிறார்.
ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிக்கு, தலை, கை, கால்களில் எலும்பு முறிவுடன் உயிருக்குப் போராடியவரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.