ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!
கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையை, கல்வியாளா் சுப.குமரேசன் தொடக்கிவைத்தாா். இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற பூஜையில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 1,008 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.
இதில் நிா்வாகிகள் செ. கொங்கேஸ்வரன், உறங்கான்பட்டி கரு. தங்கம்பிள்ளை, கீழப்பூங்குடி எம். வைரவன் செட்டியாா், வலசக்காடு பொன்னுச்சாமி, கோயில் பூசாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

