PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் திடீரென பலத்த காற்று நிலவி வருவதால் புதன்கிழமை குளிா் அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால், கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள குடிநீா்த் தேக்கம், மனோரஞ்சிதம் அணை ஆகியவற்றில் தண்ணீா் இல்லாததால் பல்வேறு இடங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதைத் தொடா்ந்து, குண்டாறு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் பலத்த காற்றும், இரவு நேரங்களில் வழக்கத்தை விட குளிா் அதிகரித்தும் காணப்படுகிறது.