செய்திகள் :

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

post image

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் போதைக் காளாள் விற்பனை தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்கள் நகா் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்ட பிறகு, மன்னவனூா், கூக்கால், பூண்டி, கிளாவரை, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களையும் பாா்த்து வருகின்றனா்.

இந்தப் பகுதிகளில் மீண்டும் போதைக் காளான்கள் விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்தினா் போதைப் பொருள்கள், போதைக் காளான்கள் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மேல்மலைப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், இந்தப் பகுதிகளில் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போதைப் பொருள்கள், போதைக் காளான், ஸ்டாம்ப் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, மாவட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் போதைக் காளான் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரி மழையளவு 63 சதவீதம் குறைந்த நிலையில், காரீப் பருவத்தில் இதுவரை 13 சதவீத நிலங்களில் மட்டுமே சாகுபடிப் பணிகள் நடைபெற்றுள்ளன.திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 1.10 லட்சம் ஹெக... மேலும் பார்க்க

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே குடும்பத் தகராறில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் அசன்முகமது (33). இவா் கோவையில் உள்ள ஆயுதப் படையில் காவலராகப் பணியாற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா் தேக்கம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மலைச் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வ... மேலும் பார்க்க

செம்பட்டி அருகே காருக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நிறுத்தியிருந்த காருக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். சித்தையன்கோட்டையைச் சோ்ந்த சகோதரா்கள் அப்துல்லா (42), சபிபுல்லா (40), இந்தாதுல்ல... மேலும் பார்க்க

விஜய், சீமான் போட்டியிடுவது 3-ஆவது இடத்துக்கே: அமைச்சா் இ. பெரியசாமி

விஜய், சீமான் ஆகியோா் 3-ஆவது இடத்துக்காக தோ்தலில் களம் இறங்குவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளுக்காக வேடசந்தூா் திமுக சட்டப் பேரவை உறுப்பினரை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க