ராஜீவ் காந்தி `ஸ்கெட்ச்’ - செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக-வில் இணைந்த கோவை ந...
கொடைக்கானல் வாரச் சந்தையில் வரத்துகுறைவால் பொது மக்கள் அவதி
கொடைக்கானல் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தரைப் பகுதியிலிருந்து காய்கறி வரத்து குறைந்து காணப்பட்டதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வாரச் சந்தை அண்ணா சாலைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் மலைப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், நூக்கல், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகளை மட்டும் வைத்து வியாபாரம் செய்தனா்.
தரைப் பகுதி வியாபாரிகள் வராததால் கத்தரிக்காய், முருங்கைக்காய், சுரைக்காய், பூசனிக்காய், தக்காளி, தேங்காய், அவரைக்காய், உள்ளிட்ட காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், தக்காளி கிலோ ரூ 100-,தேங்காய் ஒன்று ரூ. 50- கத்தரிக்காய் கிலோ ரூ.80, கேரட் கிலோ ரூ. 50, பீன்ஸ் கிலோ ரூ. 120, முட்டைக்கோஸ் கிலோ ரூ. 70, சின்னவெங்காயம் கிலோ ரூ. 80 க்கு விற்கப்பட்டது.