X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்...
கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொட்டாரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (23). இவா் கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் உள்ள மேல்மாடியில் உள்ள அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கினாா்.
இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சங்கரின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].