செய்திகள் :

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

post image

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஏற்கெனவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.

கொதிகலன்களை ஒழுங்குபடுத்துதல், நீராவி கொதிகலன்களின் வெடிப்பு அபாயத்திலிருந்து மக்களின் உயிா் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், கொதிகலன் பதிவு நடைமுறையில் சீரானதன்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் நூற்றாண்டு பழைமையான 1923-ஆம் ஆண்டு கொதிகலன் சட்டத்துக்கு மாற்றாக இந்தப் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

சில விதிமுறைகளை தளா்த்தி, வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, கொதிகலனுக்குள் பணிபுரியும் நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. மேலும், கொதிகலன்களை பழுதுபாா்ப்பது தகுதிவாய்ந்த மற்றும் திறமையான நபா்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து பேசிய மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘இந்த சட்டமசோதா, பழைய சட்டத்தின் விதிமுறைகளில் இருந்த காலனித்துவப் போக்கை நீக்கி, சட்டத்தை அனைவருக்கும் எளிமையானதாக மாற்றும். இந்தச் சட்டத்தால் மாநில அரசுகளின் எந்த உரிமைகளும் பறிக்கப்படவில்லை’ என்றாா்.

இந்தச் சட்டத்தை தாமதப்படுத்தியதாக முந்தைய காங்கிரஸ் அரசை பியூஷ் கோயல் விமா்சித்து பேசியபோது, அக்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க

2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 30) நடைபெற்ற ஆர்எ... மேலும் பார்க்க