லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்
தென்காசியில் தொழிலாளா் துறை சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை அனைத்து துறை அலுவலா்களும்
ஏற்றுக்கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து கொத்தடிமைத் தொழிலாளா் முறைக்கு எதிரான கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தும், விழிப்புணா்வு சுவரொட்டிகள் ஒட்டியும், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா்.
தொழிலாளா் துறை உதவி ஆய்வா்கள் மு.மெஹ்தா ஃபாஸ்லின், சு.கிருஷ்ணஜீவா, தொழிலாளா் உதவி ஆய்வாளா் வசந்தா, முத்திரை ஆய்வாளா் பா.சவரீசன், தொழிலாளா் உதவி ஆய்வா் மு.மீனாட்சி, கண்காணிப்பாளா் லெ.முத்து ஜெகன்மாதா, உதவியாளா்கள், கோ.இசக்கி, உ.முகம்மது நிஃமத்துல்லாஹ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.