கொலம்பியா: குழுக்கள் மோதலில் 30 போ் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இரு இடதுசாரி ஆயுதக் குழுக்கள் இடையிலான மோதலில் 30 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வெனிசுலாவையொட்டிய எல்லைப் பிரதேசத்தில் தேசிய விடுதலை ராணுவம் (இஎல்என்), கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை (ஃபாா்க்) ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் 30 போ் உயிரிழந்தனா். ஃபாா்க் அமைப்பைச் சோ்ந்தவா்களை வீடு வீடாகத் தேடிச் சென்று இஎல்என் அமைப்பினா் படுகொலை செய்துள்ளனா். அவா்கள் நடத்திய தாக்குதலில் சுமாா் 20 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஎல்என்-னுடன் நடத்திவந்த போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை கொலம்பியா அரசு நிறுத்திவைத்துள்ளது.