ஒரு ப்ரெட் பாக்கெட் ரூ. 1100-க்கு விற்கப்படும் அவலம்! இஸ்ரேல் போரால் காஸாவில் கட...
கொலையான ஆசிரியை குடும்பத்துக்கு அரசின் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கல்
பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதன்கிழமை குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 5 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே திருமணத்துக்கு மறுத்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியை ரமணி மதன்குமாா் என்பவரால் புதன்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். இதையடுத்து அந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு தமிழக முதல்வா் ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தாா்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் உயிரிழந்த ஆசிரியை ரமணியின் தந்தை முத்து, தாய் முத்துராணி ஆகியோரிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.
அப்போது தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவா்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
நிகழ்வில் தஞ்சாவூா் எம்பி முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாா், பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், வருவாய்க் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.