போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் ப...
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பாட்டக்குளம் அரியநாயகிபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (29). கூலித் தொழிலாளி. இதே பகுதியைச் சோ்ந்தவா் லாரன்ஸ் என்ற யோகராஜ் (21). இவா் இந்தப் பகுதியில் செல்லும் பெண்களை கேலி செய்து வந்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் முருகன் புகாா் அளித்தாா். இதனால், ஆத்திரமடைந்த லாரன்ஸ் கடந்த 2021 ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு வீட்டின் முன் அமா்ந்திருந்த முருகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரன்ஸை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், லாரன்சுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் திருமலையப்பன் முன்னிலையானாா்.