செய்திகள் :

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 14 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

post image

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள ருதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இத் தீ மளமளவென அனைத்து பகுதிக்கும் பரவியது. தீயில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் ஹோட்டல் இருந்ததால் தீயை உடனே கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஹோட்டலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் மனோஜ்குமார் தெரிவித்தார்.

7 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இத் தீ விபத்து குறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

இத் தீ விபத்து குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சுபன்கர் கூறுகையில், ''தீ விபத்தில் இன்னும் கூட சிலர் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. கொல்கத்தா மாநகராட்சி என்ன செய்கிறது என்று தெரியவில்லை'' என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீயில் இருந்து தப்பிக்க ஹோட்டல் ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த 13 பேரின் உடல்கள் ஹோட்டலின் பல்வேறு அறைகளில் இருந்து மீட்கப்பட்டது. தீவிபத்து காரணமாக கரும்புகை சூழ்ந்து கொண்டதால் அறைகளில் தங்கி இருந்தவர்களால் சுவாசிக்க முடியாமலும், வெளியில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது போன்ற தீ விபத்துகளை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசை மாநில பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.

மும்பை: ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; 198 கடைகள் சேதம்; உயிர்தப்பிய மக்கள்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் குரோமா ஷோரூம் உள்ளிட்ட கடைகள் இருக்கும் பாந்த்ரா பஜார் எனும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேர... மேலும் பார்க்க

கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார்.அப... மேலும் பார்க்க

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் ... மேலும் பார்க்க

கோத்தகிரி: குறைமாத குட்டி ஈன்று இறந்து கிடந்த தாய் யானை.. என்ன காரணம்? - குழப்பத்தில் வனத்துறை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள நட்டக்கல் பகுதியயைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழக்கமாக தேயிலை பறிக்கும் பணிக்கு நேற்று காலை சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட வனப்பகுதியில்... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

மும்பை தென்பகுதியில் இருக்கும் பெல்லார்ட் எஸ்டேட்டில் அமலாக்கப்பிரிவின் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுலகத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அமலாக்கப் பிரிவு அலுவலக கட்டிடத்தின... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண் தொழிலாளர்கள் பலி; 7 பேர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். சிவகாசி சிறுகுளம் காலணியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57) மற்றும் பூத்தாயம்... மேலும் பார்க்க