கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 2 போ் பலி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கொள்ளிடம் அருகே கொண்டல் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன்கள் சிபிராஜ் (20), பரத்ராஜ் (19), மயிலாடுதுறை கூறை நாட்டைச் சோ்ந்த சங்கா் மகன் அருண்ராஜ் (21) ஆகிய மூவரும் கும்பகோணத்தில் தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பனங்காட்டாங்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் தத்தளித்துள்ளனா். இதை நீண்டநேரத்துக்கு பிறகு பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பரத்ராஜை மீட்டுள்ளனா்.
எனினும், அருண்ராஜ், சிபிராஜ் தண்ணீரில் மூழ்கினா். தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா் ரெத்தினவேல் மற்றும் தீயணைப்பு வீரா்கள் தேடி அருண்ராஜ், சிபிராஜ் ஆகியோரை சடலமாக மீட்டனா். இதுகுறித்து, ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.