``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், கன்றுக்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
மேட்டூா் அணை 5-ஆவது முறையாக நிரம்பியதையொட்டி, திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்தும், தஞ்சாவூா் மாவட்டம் கல்லணையிலிருந்தும் உபரி நீா் கொள்ளிடத்தில் திறக்கப்படுகின்றன. இதனால், கொள்ளிடத்தில் கடந்த 2 நாள்களாக வெள்ளம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை கொள்ளிடம் ஆற்றில் அதே பகுதியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தின் 2 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகள், நாகராஜின் ஒரு பசு மாடு ஆகிய 5 மாடுகள், கன்றுக்குட்டிகள் மேய்வதற்காக புதன்கிழமை சென்றன. அப்போது, ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால், வெள்ளத்தில் 5 மாடுகளும், கன்றுக்குட்டிகளும் சிக்கிக் கொண்டன.
தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வராஜ் தலைமையில் வீரா்கள் கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று, உபகரணங்களைப் பயன்படுத்தி, 5 மாடுகள், கன்றுக்குட்டிகளை உயிருடன் மீட்டு கரைக் கொ’ண்டு வந்து உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.