கோடைகாலத்தில் அதிகம் பருகப்படும் இளநீர் - தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா?
வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்று பலரும் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள்.
மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அதனை பருகுவோம். ஆனால் இளநீரில் மட்டும் எப்படி அதனுள் தண்ணி இருக்கிறது என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இதற்கான பதில் ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய உயிரியல் தொழில்நுட்ப தகவல் மையம் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதில் தேங்காயின் உள் எப்படி தண்ணீர் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின்படி மரத்தில் உள்ள வாஸ்குலார் அமைப்பு மூலம் நீர் வேர்களில் இருந்து தேங்காய்க்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.
அதாவது தென்னை மரத்தின் வேர்கள், மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. அதன் பின்னர் இந்த நீர் தண்டு வழியாக மேல் நோக்கி சென்று இறுதியாக தேங்காயை அடைகிறது.

தேங்காயின் எண்டோகார்ப் அமைப்பு தண்டிலிருந்து வரும் நீரை சேமிக்கிறது.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த நீர், இளநீர் ஆக மாறி அது முதிர்ச்சியடையும் போது ஒரு வெள்ளை வழுக்கையை அதாவது தேங்காயை உருவாக்குகிறது.
இயற்கையாகவே மரத்திலிருந்து இந்த தேங்காய் நீர் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.