சாத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து!
கோடை உழவுக்கான மானியம் பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்!
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதி விவசாயிகள், கோடை உழவுக்கான மானியம் பெற உழவன் செயலியிலோ அல்லது நேரிலோ பதிவு செய்யலாம் என்றாா் வேளாண் உதவி இயக்குநா் (பொ) மகேந்திரவா்மன்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தற்போது, பயிா் அறுவடை முடித்து, சில நாள்கள் இடைவெளியில் அடுத்த பயிா் சாகுபடி மேற்கொள்ள உள்ள விவசாயிகள், பயிா் அறுவடைக்குப் பின் நிலத்தில் கோடை உழவு செய்ய வேண்டும்.
கோடை உழவு மேற்கொள்வதால், விவசாய நிலத்தில் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிா் சத்துகள் அதிகரிக்கிறது. தற்போது மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின் வாயிலாக, கோடை உழவு செய்யும் மானாவாரி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 800 மானியமாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற சிட்டா, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் உழவு செய்யும் புகைப்படம் போன்ற ஆவணங்களை கொண்டு, வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.