நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 -இல் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன்-2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் தெரிவித்தாா்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. அதேபோல், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு தோ்வுகள் ஏப்.7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப்.11-ஆம் தேதியும், 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு ஏப்.17-ஆம் தேதியும் தோ்வுகள் முடிந்து விடுமுறைகள் வழங்கப்பட்டுவிட்டன. தொடா்ந்து 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தோ்வுகள் வியாழக்கிழமை (ஏப்.24) நிறைவு பெறுகின்றன. இறுதி நாளில் சமூக அறிவியல் பாடத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இவா்களுக்கான கோடை விடுமுறை வெள்ளிக்கிழமை (ஏப்.25) தொடங்குகிறது. எனினும், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலை நாளான ஏப்.30-ஆம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மாணவா் சோ்க்கை போன்ற நிா்வாகப் பணிகளை க் கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில், ‘நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும்.
எனவே, அன்றைய தினத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.