அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
கோத்தகிரியில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயத்தை அடுத்து, நீா் ஆதாரமுள்ள விளைநிலங்களில், அதிக பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, போதிய மழை பெய்த நிலையில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது.
தற்போது, ஒரு கிலோ முட்டைக்கோஸுக்கு, மண்டிகளில் ரூ.20 வரை விலை கிடைக்கிறது. உள்ளூா் மாா்க்கெட்டில் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
முட்டைக்கோஸ் பயிா் செய்ய, அதிக முதலீடு தேவை என்பதால், இந்த விலை போதுமானதாக இல்லை. இருப்பினும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் காலங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனா்.