பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாய...
கோனேரிப்பட்டி ஓம் காளியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டியில் உள்ள ஓம் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து அம்மன் திருவீதி உலா, திருக்கல்யாணம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதன் கிழமை மாலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தனது மனைவி ராதா, மகன் மிதுன் மற்றும் குடும்ப உறுப்பினா்களுடன் கோயிலுக்கு வந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக கோயில் நிா்வாகம் சாா்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
