கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!
நகைச்சுவை நடிகர்கள் கோபி, சுதாகர் இணைந்து நடித்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்களின் தனித்துவமான நகைச்சுவை விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதுடன் மீம் அட்டைகளாக மாறி இணையத்தில் வைரலாகும்.
இவர்கள் இருவரும், ‘ஓ மை பியூட்டிஃபுல்’ என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்க, பரிதாபங்கள் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்