Kalolsavam: கேரள மாநில பள்ளிக் கலை விழா; பிரமாண்ட சமையல், கண்கவர் நிகழ்ச்சிகள்.....
கோபி பாரியூரில் இன்று குண்டம் திருவிழா
கோபி பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, மாவிளக்கு பூஜை மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன. மேலும், 60 அடி நீள குண்டம் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. கோயிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் குண்டம் இறங்குகின்றனா்.
குண்டம் இறங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் புதன்கிழமையே கோயிலுக்கு வந்து காத்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து 10-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தோ்த் திருவிழா நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.