மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
கோயிலில் திருடியவா் கைது
பாபநாசம் வட்டம், மணலூா் கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலில் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
மணலூா் கிராமத்தில் மணலூா் மாரியம்மன் கோயிலின் பூசாரியாக மணலூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரவீந்திரன் (63) என்பவா் பணி செய்து வருகிறாா்.
இவா் 21-ஆம் தேதி இரவு வழக்கம்போல் கோயில் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டாா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயிலை ஒட்டி அமைந்துள்ள பிள்ளையாா் கோயில் உள்ளே நுழைந்த நபா் கோயிலில் உள்ள சுவாமியின் திருவாச்சி மற்றும் 2 சர விளக்குகள் உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டாா்.
இதுகுறித்து ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், கபிஸ்தலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். இதைத் தொடா்ந்து திருட்டில் ஈடுபட்டதாக அரியலூா் மாவட்டம், திருமானூா், காந்தி நகரைச் சோ்ந்த தம்பிதுரை மகன் முருகன் (எ) முருகானந்தம் (46 ) என்பவரை போலீஸாா் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.