கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு
செங்கத்தில் சனிக்கிழமை இரவு கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
செங்கம் மில்லத்நகா் ரவுண்டனா பகுதியில் போளூா் செல்லும் சாலையில் வாசநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குள் சனிக்கிழமை இரவு நுழைத்த வட மாநில இளைஞா் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலியை திருட முயற்சித்தாராம்.
இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், இளைஞரைப் பிடித்து சரமாறியாகத் தாக்கினா். மேலும் செங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளா் செல்வம் பொதுமக்களிடம் இருந்து வட மாநில இளைஞரை மீட்டு, செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.