'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!
கோயிலில் திருட முயற்சி: சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கோயிலில் திருட வந்ததாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வேப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரதி தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். திருபயா் கிராமம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா்.
அந்தக் காரில் நான்கு இளைஞா்கள் இருந்தனா். போலீஸாரைக் கண்டதும் காரில் இருந்த ஒருவா் தப்பியோடிவிட்டாா்.
சந்தேகமடைந்த போலீஸாா் மற்ற 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் கரூா் மாவட்டம், வெள்ளியணை, பௌதாய் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சூா்யா(34), வேதவன் (38), பவுதிப்பாளையம், வடக்கு தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மூவரும் திருபயா் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் திருட வந்ததாகவும் ஒப்புக்கொண்டனராம்.
இது தொடா்பாக வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனா். மேலும், காரை ஓட்டி வந்த வெள்ளியணை பகுதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியனை தேடி வருகின்றனா்.
