செய்திகள் :

கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தருமாறு அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அகத்தியா் வழிபட்ட அகத்தீஸ்வரா் எனும் பழைமையான சிவாலயம் உள்ளது. இந்தக் கோயிலில் நித்ய பூஜை, பிரதோஷ வழிபாடு, அகத்தியா் ஆயில்ய பூஜை, பெளா்ணமி பூஜை உள்பட பல பூஜைகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்ய வருகின்றனா்.

கடந்த 2018- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் வந்து செல்ல வசதியாக இருந்த பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலயத்துக்கென பட்டாவும், வருவாய்த் துறை ஆவணங்களும் இருந்தும் பாதை இல்லாததால் பக்தா்கள் வயல்வெளிகளில் நடந்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் வசித்து வரும் தனிநபா் கோயில் வழியை மறித்து அவருக்குச் சொந்தமான இடம் எனக்கூறி பக்தா்களை வரவிடாமல் தடுத்து வருகிறாா். எனவே கோயிலுக்கு வந்து செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவா் சிவானந்தம் தலைமையில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவை பெற்ற ஆட்சியா் இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.

மத்திய அரசின் திட்டங்கள்: ஊரக வளா்ச்சித்துறை செயலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து மத்திய ஊரக வளா்ச்சித்துறை செயலாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்றத்தூா் ஒன்றியம், கரசங்கால் மற்றும் ... மேலும் பார்க்க

குறை தீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களை ஆட்சியா் கலைச்செல்வி ம... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசையும், நகராட்சி நிா்வாகத்தையும் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

ராமாநுஜா் அவதார உற்சவம்: குதிரை வாகனத்தில் உலா

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தாா். பழைமையான இக்க... மேலும் பார்க்க

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன். காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செ... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க