சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
கோயில் கொடை விழா: அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சுயம்புலிங்க துா்கை அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால் குடம், அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.
அபிராமம் சாந்த கணபதி கோயிலில் அமைந்துள்ள சுயம்புலிங்க துா்கை அம்மனுக்கு 35-ஆம் ஆண்டு ஆடி கொடை விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சாந்த கணபதி, சுயம்புலிங்க துா்கை அம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சனிக்கிழமை 108 புஷ்ப தாம்பூலம், பால் குடம், அக்னிச் சட்டி எடுத்தும் ஊா்வலமாகச் சென்று துா்கை அம்மனுக்கு பக்தா்களை அா்ச்சனை செய்தனா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.