சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
கோயில் விழாவில் எஸ்.ஐ.யை தாக்கியவா் கைது
மேட்டூா் கோயில் விழாவில் மது போதையில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.
மேட்டூரில் உள்ள மாதா கோயிலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தோ்திருவிழா நடைபெறும். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் மேட்டூா் இந்திரா நகரைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி சுந்தா் (30) என்பவா் மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளா் பிரசாந்த், சுந்தரை கட்டுப்படுத்த முயன்றபோது அவரையும் சுந்தா் தாக்கினாா். இதுகுறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தரைக் கைது செய்தனா்.