கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டி இஎஸ்ஐ மருந்தகம் எதிரேயுள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான கடம்பூா் செ. ராஜு தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி செயலா் சங்கா் கணேஷ், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சத்யா, லட்சுமண பெருமாள், மகளிரணி மாவட்டத் தலைவா் பத்மாவதி, ஒன்றியச் செயலா் அழகா்சாமி,அன்புராஜ், நகர செயலா் விஜய பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பின்னா், அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில், சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயில் ஆகிய இடங்களில் அதிமுக சாா்பில் அன்னதானத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். மேலும், கே.சிதம்பராபுரம், கோவில்பட்டி பண்ணைத் தோட்ட தெரு, காமநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் எம்ஜிஆா் படத்துக்கு அவா் அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலா் வண்டானம் கருப்பசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கருகே உள்ள ஹோட்டல் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்திற்கு மாநில எம்ஜிஆா் இளைஞா் அணி முன்னாள் துணைச் செயலா் சீனிராஜ் தலைமையில் அதிமுக வழக்குரைஞா் அணி வடக்குமாவட்ட முன்னாள் செயலா் சிவபெருமாள், கோவில்பட்டி தொகுதி இளைஞா்கள் ஒருங்கிணைப்புக் குழு செயலா் கோமதிநாயகம் உள்பட பலா் எம்ஜிஆா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனா். கழுகுமலை, கயத்தாறு ஆகிய பகுதிகளிலும் எம்ஜிஆா் உருவப்படத்திற்கு அதிமுகவினா் மாலை அணிவித்தனா்.