பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுர விநியோகம்!
தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுர விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியபாண்டியன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் கவின்ராஜ், தொழிலதிபா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். மேலும், அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றி விபத்துகளை தவிா்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன நிா்வாகிகள் ராமசுப்பிரமணியன், முத்துமாரியம்மன், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள், பயிற்றுநா்கள், போக்குவரத்து போலீஸாா் பங்கேற்றனா்.