ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு
கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் 4ஆவது தெருவில் உள்ள விநாயகா் கோயிலுக்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தாராம். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், கோமதி கழுத்தில் அணிந்திருந்த சுமாா் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, நகையைப் பறிந்த நபரை தேடி வருகின்றனா்.